director muthaiah directing surya movie

Advertisment

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதனையடுத்து முத்தையா அடுத்ததாக ஆர்யாவை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ccc76e3a-4ee3-4275-8e25-da8b99e334e5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_25.jpg" />

இந்நிலையில் இயக்குநர் முத்தையா சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருமன் வெற்றியைத்தொடர்ந்து அண்மையில் முத்தையாவை சந்தித்த சூர்யா தனக்கு ஒரு கதையை தயார் செய்ய சொன்னதாகவும், அதற்கான பணியில் முத்தையா இறங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சூர்யாவிடம் இருந்து இதனை எதிர்பார்க்காத முத்தையா தற்போது மகிழ்ச்சியில் உள்ளாராம்.

Advertisment

பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா, வெற்றிமாறன், சுதா கொங்கரா என முன்னணிஇயக்குநர்களுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.